இணைய தேடலை புரட்டிப் போடக் கூடிய புதிய தேடல் பொறி ஒன்றை “OpenAI” நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அந்தவகையில், இந்த தேடல் பொறிக்கு “SearchGPT” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், “SearchGPT” செயற்கை நுண்ணறிவின் மூலம் (AI) நமது இணைய தேடல் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒரு கேள்வி கேட்ட பிறகு, அதற்கான பதில்களை Search GPT தருவதுடன் குறித்த பதில் எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாகக் கூறுவதன் மூலம் நாம் பெறும் தகவல்களின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.
அதன்படி, “SearchGPT”இன் இந்த புதிய அம்சங்கள், இணைய தேடல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், கூகுள் (Google), பிங்க் (Ping) போன்ற பாரம்பரிய தேடுபொறிகள், ”SearchGPT”இன் இந்த சவாலுக்கு எப்படி பதிலளிக்கும் என்பதை பொறுத்தே வருகின்ற காலத்தில் எந்த தேடுபொறி அதிகம் பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.