அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று தாம் கூறி வருகிறேன்.
சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வடக்கின் சில அரசியல் கட்சிகளினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கின் ஒரு தொகுதி இளைஞர்கள் தற்பொழுது காணி, பொலிஸ் அதிகாரம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது தங்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்குவது தமது இலக்கு என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கலாம் எனவும் ஒரு காலத்தில் அவர் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ கூட பதவி வகிக்கலாம்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான எதிராளி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச என நமால் தெரிவித்துள்ளதோடு தமது கட்சியிலிருந்து விலகி வெளியேறியவர்களை பிரதான சவாலாகவோ எதிராடிகளாகவோ கருதவில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.