கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதேவேளை, கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மொழிமற்றும் வாணிபம் ஆகிய பாடங்களுக்கானஆசிரியர்கள் மூன்றுமொழிகளிலும் கற்பிக்கக்கூடிய 5,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்படி 5,500 பேரையும்இணைத்துக்கொள்ளும்போது,35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளுக்கு முன்னுரிமைவழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கல்வியமைச்சில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்- பௌதீக மற்றும் மனித வளங்களை பூரணப்படுத்துவதால்மாத்திரம் கல்வித் துறையை மேம்படுத்தமுடியாது. மாணவர்களின் வினைத்திறன் மிகவும்அவசியமாகும். அதேபோன்று சமூகத்தில் தற்போது நிலவும்போதைவஸ்து போன்ற தீயசெயற்பாடுகள் மற்றும் முறையற்ற விதத்தில் நடந்துகொள்ளுதல் ஆகியவற்றை பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. அதேபோன்றுபுதிய தலைமுறையினர் மத்தியில்ஏற்பட்டுள்ள ஒழுக்கங்களுக்குமாறான செயற்பாடுகள் குறிப்பாக பிரிவெனா போன்ற கல்வி நடவடிக்கைககளின்போது, இது தொடர்பில் மிகவும் அவதானம்செலுத்தவேண்டியது அவசியமாகும்.
அத்துடன் பாடசாலை நிர்வாகத்தில் அதிபர் சுயாதீனமாகசெயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். பாடசாலை அபிவிருத்தி சங்கமோ அல்லது பழைய மாணவர் சங்கமோ தேவையற்றவிதத்தில் அந்த விடயங்களில் தலையிடுவது பொருத்தமானதல்ல. இதனை, தாம், ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை -என்றார்.