Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு; விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு; விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

2 years ago
in முக்கிய செய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று (16) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது இதனை கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவர் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் அதிகாரிகள் வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர். மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது. இச் சடலத்தின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சேலக ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு
செய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு

May 15, 2025
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்
செய்திகள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

May 15, 2025
தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி
செய்திகள்

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

May 15, 2025
மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது
செய்திகள்

மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

May 15, 2025
தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
காணொளிகள்

தனக்கு வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவை தடுத்த உள்ளுராட்சி வேட்பாளர்; முதியவருக்கு கொடுப்பனவை வழங்க மறுத்த அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்

May 15, 2025
இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி
செய்திகள்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

May 15, 2025
Next Post
இணையத்தளத்தின் ஊடாக வியாபார செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த புதிய பொறிமுறை!

இணையத்தளத்தின் ஊடாக வியாபார செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த புதிய பொறிமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு