Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்!

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities மற்றும் விமோச்சனா (மது மற்றும் போதை பொருள் புனர்வாழ்வு மையம்) ஏற்பாட்டில் நேற்று (09) மட்டக்களப்பு தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனதீவு பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், போலிஸ் உத்தியோகத்தர்கள் , சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர்களும், சமய தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது வளவாளராக கலந்து கொண்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் அவர்களால் தேசிய மட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலும் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கம் பற்றியும் போதை பொருளில் தங்கி வாழுகின்ற நிலைமையில் உள்ளவர்களை குற்றவாளிகளாகவோ, நோயாளிகளாகவோ அணுகாமல், அவர்கள் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான அவர்களின் கலாச்சார சமூக பின்னணிக்கு இசைவான, பொருத்தமான புனர்வாழ்வு செயல்முறைகளை அளிப்பதன் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்தச் செயல்முறையில் விமோச்சனா இல்லத்தின் பங்களிப்பு சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கங்கள் பயனாளிகளின் வாழ்க்கைப் பயணத்தினூடாக பகிர்ந்துகொள்ளப்பட்டது.

விமோச்சனா இல்லத்தின் தொடர்ச்சியான பங்களிப்பினை உறுதி செய்வதற்கான எத்தனிப்பாக, அரசினால் வழங்கப்பட்டிருக்கின்ற காணியில் சகல வசதிகளுடனும் கூடிய, சுய நிறைவுடனான நிரந்தரமான புனர்வாழ்வு மையத்தினை, ஏனைய அரச, அரச சார்பற்ற பங்குதாரர்களுடன் கூட்டிணைந்த பங்களிப்புடன் உருவாக்கிக் கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; பெண் கைது

May 13, 2025
கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
Next Post
மதுபான போத்தல்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

மதுபான போத்தல்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.