அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் பைபிள் விற்பனை செய்து 3 இலட்சம் டொலர் வருவாய் ஈட்டியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகின்றநிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ட்ரம்ப், தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் ‘கோட் பிளஸ் த யு.எஸ்.ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ள பைபிளை விற்பனை செய்துவருகிறார்.
குறித்த பைபிளின் விலை 60 டொலர் என்றும் தற்போது வரை 3 இலட்சம் டொலர் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.