Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

3 years ago
in செய்திகள்

அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் பேசுகின்ற போது ஒரே குரலில் பேச வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (18.06.2023) இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவான நிறைவேற்றுக் குழு கூடி பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. இந்தக் கட்சிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டு இன்று இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் யாப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்த யாப்பு அடுத்து சில தினங்களில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பதவி நிலைகளுக்கும் நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இணைத் தலைவர்களை கொண்ட கட்சியாக இது தொடர்ந்து செயற்படும். தற்போது 5 கட்சிகள் இதில் உள்ளன. அவர்கள் 5 பேரும் இணைத் தலைவர்களாக செயற்படுவர்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை வடக்கு – கிழக்கு பகுதி எங்கும் விஸ்தரிப்பது என தீர்மானித்துள்ளோம். அதனுடைய தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஜனா அவர்களை தெரிவு செய்துள்ளோம்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கட்சியை பலப்படுத்த சகல நடவடிக்கைகளையும் அவர் எடுப்பார் என்பதுடன், மாவட்டங்கள், தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்து உயர்மட்ட குழுவுடன் பேசி இறுதி செய்வார் என நம்புகின்றோம்.

கட்சியின் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த துளசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து நிதிக் குழு ஒன்றையும் நிறுவ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்னை மாற்றும் வரை நான் இந்தக் கட்சியின் உடைய பேச்சாளராகவும் தெரிவு செயற்படுவேன். தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டை மிக இறுக்கமாக எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு இவர்கள் இணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.