தாம் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல தெஹியோவிட்ட உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஜனாதிபதி முறைமை மாற்றப்படும் என தலைவர்கள் கூறினாலும் அவ்வாறு செய்யப்படவில்லை எனவும், பதவி மோகம் இல்லாததால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகவும் குறிப்பிட்டார். .
அதன்படி, நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக அமைப்பை தாம் கொள்வதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.