Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
97 வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற இலங்கை பெண்!

97 வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற இலங்கை பெண்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான லீலாவதி அசிலின் தர்மரத்ன பாலி மற்றும் பௌத்தத்தில் முதுகலைப்பட்டத்தை பெற்றுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் 143 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

களனி ரஜமஹா விகாரையின் தலைவரும், களனி பல்கலைக்கழக வேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரோபா இந்த முதுகலைப் பட்டத்தை வழங்கி வைத்துள்ளார்.

லீலாவதி அசிலின் தர்மரத்ன என்பவர் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வஹரணவிலுள்ள மில்லவ கிராமத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்ப கல்வியை மில்லவ பெண்கள் கல்லூரியில் கற்றுள்ளார்.

இதன்பின்னர் உயர்தரத்தில் சித்திப்பெற்று ஆசிரியர் பணியில் சேவையாற்றிய பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற நொத்தாரிசுகளுக்கான பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற லீலாவதி நொத்தாரிசு பரீட்சையில் சித்தியடைந்த ஒரே பெண் என்ற விருதையும் பெற்று பாராட்டப்பட்டுள்ளார்.

இந்த முதுகலைப் பட்டம் தன் வாழ்வில் கிடைத்த மாபெரும் சாதனை என்றும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி வரலாற்றில் விசேட மைல்கல்லாக விளங்கும் லீலாவதி பெற்ற இந்த முதுகலைப் பட்டம் உயர்கல்வியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
செய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!

October 27, 2026
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

October 27, 2026
கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026
“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!
உலக செய்திகள்

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!

October 27, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

October 27, 2026
Next Post
ஆனமடு பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை!

ஆனமடு பகுதியில் நபர் ஒருவர் அடித்துக் கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு