Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் விவேகானந்தர் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் விவேகானந்தர் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் விவேகானந்தர் சிறுவர் பூங்கா ஒன்று நேற்று ( 25 ) காலை 9 மணிக்கு உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்குடன் க. சற்குனேஸ்வரன் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு வழி நடத்திக் கொண்டுவரும் சமூக நலன்புரி அமைப்பின் ( SWO) மற்றொரு செயற்பாடாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை சாலை வழியோரமாக மட்டக்களப்பு நகரிலிருந்து ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தொலைவில் குருக்கள்மடம், ஏத்தாளைகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகாமையில், குருக்கள்மடம் கிரான்குளம் கிராம எல்லைகளுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட இலவச வைத்திய சேவையினை வழங்கும் சத்தியசாயி சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு முன்பாக இயற்கை எழில் சூழ்ந்த வனப்பு மிக்க பகுதியில் இவ் சிறுவர் பூங்கா பல தன்னார்வலர்களின் மில்லியன் கணக்கான நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

இவ் விவேகானந்த பூங்கா சிறுவர்களுக்கான பொழுது போக்கு தளம் என்பதை தாண்டி ஆன்மீக உணர்வை தூண்டும் ஒரு விவேகானந்தரின் ஆலயம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவின் மத்தியில் 30 அடி உயர விவேகானந்த உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், இது வரை இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள விவேகாந்தரின் அமர்ந்த நிலையிலான சிலையில் மிக உயரமான சிலை என்ற சிறப்பை இச் சிலை பெறுகிறது.

அத்தோடு 07 அடி உயரமான நிற்கும் நிலையிலமைந்த விவேகானந்தரின் பல உருவச் சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அமைதியாக மனதை ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் ஈடுபடும் நோக்கில், விவேகானந்தரின் இல்லங்கள் பல அமைக்கப்பட்டு திரும்புமிடம் எங்கும் விவேகானந்தரின் திருவுருவங்களுடன், கண் கவர் வர்ணங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களையும், பூமரங்களையும் கொண்ட பூ மரச்சோலையாக இப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப் பூங்காவில் சிறுவர்கள் பொழுதை களிக்கும் நோக்குடன் பல நவீன விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு முற்றம் அமைக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுச் செல்லப்படுவதுடன், சிற்றுண்டிச்சாலை என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓர் இடமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு