மார்ச் 12 அமைப்பினால் ஏற்பாடு செய்துள்ள 2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் விவாத்துக்காக பொது மக்களின் கேள்விகளை அனுப்ப முடியுமான இன்று 02ஆம் திகதி திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது.
இந்த விவாதம் மூன்று கட்டங்களாக இடம்பெற இருப்பதுடன், அதன் முதலாவது கட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. இதன் இரண்டாம் கட்ட விவாதம் 8ஆம் திகதியும் மூன்றாம் கட்ட விவாதம் 9ஆம் திகதியும் இடம்பெற இருக்கிறது. இந்த விவாத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர்களில் அதிகமானவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த விவாதத்தின்போது ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேள்விகளை கேட்பதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது. அவ்வாறு வேட்பாளர்களிடம் கேட்க இருக்கும் கேள்விகளை ஏற்றுக்காெள்வதை நாளையுடன் நிறைவுக்கு கொண்டுவர மார்ச் 12 அமைப்பின் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் 2ஆம் திகதி வரை பின்வரும் கூகுல் விண்ணப்பம் https://bit.ly/PresidentialDebate2024 மற்றும் முகப்புத்தக பக்கம் https://www.facebook.com/march12movement என்ற முகவரிக்கு கேள்விகளை அனுப்புவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது. மார்ச் 12 அமைப்பின் முகப்புத்தகத்துக்கு கேள்விகளை அனுப்ப முடியும் என மார்ச் 12 அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.