Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (05) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகங்கள், காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகங்கள், காவல்துறை நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு காவல்துறை பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று தபால் மூலம் தமது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டெம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

தபால் மூல வாக்குகளை குறித்த திகதிகளில் அடையாளப்படுத்த முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் எதிர்வரும், 11, 12ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை அடையாளப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் நேற்று ஆரம்பமாகியது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு