தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமர திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில் பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் ஜேவிபியினர் இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள், சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம்.
ஆனால் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும் ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்.
அது மட்டும் அல்ல தேசிய மக்கள் கட்சியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் நிலையில் அவர்களின் ஆட்சி வருவார்களானால் இலங்கை தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.