Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமே எமது மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கினோம்; தருவதை வாங்குங்கள் வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு போடுங்கள் என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

நாமே எமது மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கினோம்; தருவதை வாங்குங்கள் வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு போடுங்கள் என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

2 years ago
in அரசியல், செய்திகள்

அனுரகுமார திஸாநாயக்க தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, வைரவ புளியங்குளத்தில் நேற்றுமுன்தினம் (03) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தொவித்ததாவது,

“அன்று கோட்டபாய முஸ்லிம்களின் வாக்கை கொள்ளையடிக்க அலிசப்ரி என்ற ஒருவரை கொண்டு திரிந்தார். அவர் கோட்டபாயவை புகழ்ந்து வாக்கை கொள்ளையடித்தார்.

கடைசியில் எமது மையத்துக்களை எரித்துக் கொண்டிருந்த போதும், எம்மை சிறைக்குள் அடைத்த போதும் அமைச்சுப் பதவியை அலிசப்ரிக்கு கோட்டபாய வழங்கினார்.

அது போலவே அனுரவும் தொப்பி போட்ட முஸ்லிம் மௌலவி ஒருவரை கூட்டிக் கொண்டு திரிந்து வாக்கை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்.

அவர் முஸ்லிம் இளைஞர்களை பிழையாக வழிநடத்த முயல்கிறார். முஸ்லிம் தலைமைகளைப் பற்றி பேசுகிறார். நாம் என்ன செய்தோம் என்று அந்த மௌலவி கேட்கின்றார்.

நாம் என்ன செய்தோம் என்பதை எமது மக்களிடம் கேட்டுப் பாருங்கள். பல அபிவிருத்திகளையும், மீள்குடியேற்றத்தையும் செய்ததுடன் வேலைவாய்ப்புக்களையும் வழங்கியுள்ளோம்.

எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வகையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளோம்.

ஆகவே பொய்களை நம்பாதீர்கள். அதேபோல், ரணில் விக்ரமசிங்கவின் பணத்திற்காக சோரம் போய் விடாதீர்கள். இந்த மாவட்டத்தில் 4 வருடமாக இராஜாங்க அமைச்சராக இருப்பவர் மக்களுக்கு ஒன்றுமே செய்யாது சோற்று பார்சலும், 2000 ரூபாய் காசும் கொடுத்து மக்களை அழைத்து கொண்டு திரிகிறார். தருவதை வாங்குங்கள் வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு போடுங்கள்.

தபால் மூல வாக்களிக்கும் போது அரச உத்தியோகத்தர்கள் சிந்தித்து வாக்களியுங்கள். உங்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் எமது ஆட்சியில் நடைபெறும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து இந்த நாட்டை மீட்டு எடுக்க அனைவரும் அணிதிரள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
Next Post
சில அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டது கட்டுப்பாட்டு விலை!

சில அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டது கட்டுப்பாட்டு விலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு