Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்;அக்கரபத்தனையில் சம்பவம்!

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்;அக்கரபத்தனையில் சம்பவம்!

2 years ago
in செய்திகள்

அக்கரபத்தனை வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் சிசுவின் சடலம் தொடர்பில், பெண் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் அக்கரபத்தனை பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிசுவின் தாயார் 24 வயதான திருமணமாகாத பெண் எனவும், இவர் முச்சக்கரவண்டி சாரதியுடன் (28வயது ) தொடர்பு வைத்திருந்தமையும் பொலிஸ் விசரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு முச்சக்கரவண்டி சாரதி திருமணமானவர் என்றும் அவர், ஒரு பிள்ளையின் தந்தையாவார் என்பதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

சிசுவை பிரசவித்த பெண், முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டுக்குப் பக்கத்தில் வசிப்பதாகவும், அவர் மாவனெல்ல பிரதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில், முச்சக்கரவண்டியின் சாரதி, தனது சகோதரனுடைய முச்சக்கரவண்டியில் மாவனல்லை பிரதேசத்திற்குச் சென்று அவரை அக்கரப்பத்தனை தோட்டத்துக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிசு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு சில நாட்களாகி இருந்ததாகவும், குழந்தையின் கழுத்தில் கம்பி ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர், இது படுகொலையா என்பது பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டி சாரதியின் தாய் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பொலித்தீன் பையில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.

சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா பதில் நீதவான் விஜேவிக்கிரமவினால் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்குமாறு அக்கரபத்தனை பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சஜித்தின் பிரச்சாரக் கூட்டம்!

யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சஜித்தின் பிரச்சாரக் கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு