சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என அழைக்கப்படும் அனுஷா லக்மாலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘கஜ்ஜா’ என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அனுஷா லக்மாலி பிரதான சந்தேகநபராகத் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








