குருணாகல் – கண்டி வீதியில் பஸ் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தங்க புத்தர் சிலை என்று கூறப்படும் ஒரு சிலையுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று (12) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் புத்தளம், முந்தல், வனாத்தவில்லு மற்றும் உடப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (13) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலையின் மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








