Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த நாட்டுக்கு ஒழுக்க விழுமியத்துடன் கூடிய ஒரு சமூகமே தேவை; சஜித் தெரிவிப்பு!

இந்த நாட்டுக்கு ஒழுக்க விழுமியத்துடன் கூடிய ஒரு சமூகமே தேவை; சஜித் தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

இந்த நாட்டுக்கு கொலை கலாசாரமும், அச்சுறுத்தலும், தீவிரவாதமும் தேவையில்லை ஒழுக்க விழுமியத்துடன் கூடிய ஒரு சமூகமே தேவை. அனைவருக்கும் சுபீட்சம் கிடைக்கின்ற நாடொன்று வேண்டும். அந்த நாட்டுக்கான அடித்தளம் இடப்பட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 51ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெள்ளிக்கிழமை (13) ஹபராதுவ நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்களில் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அனுரகுமார திசாநாயக்கவும் மேலும் சிலரும் கூறிக்கொண்டு திரிகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை. இன்று மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான பல வெகுஜன அமைப்புகளின் கூட்டத்துக்கு இடைநடுவில் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தடிகள் பொல்லுகளால் தாக்கியிருக்கின்றார்கள். புள்ளடிக்கு பயங்கரமாக குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தி, துப்பாக்கிமுனையில் வன்முறையை ஏற்படுத்தி, பேப்பர் துண்டு ஒன்றினூடாக அச்சுறுத்தல் விடுக்கின்ற யுகத்துக்கு அனுரகுமார நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.

ரணிலும் அனுரவும் சேர்ந்து வைக்கின்ற பொறிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் போட்டி களத்தில் இருக்கின்றார். ஒரு வேட்பாளர் அவரே தோல்வி அடைவார் என்று கூறுவது இதுவரையும் கேட்காத ஒரு விடயமாகும். இது ஒரு புதுமையாக இருக்கிறது. ரணில் விக்ரமசிங்க நாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக அன்றி அனுரகுமார திசாநாயக்கவை கையில் தாங்கிக்கொள்வதற்காகவே செயற்பட்டு வருகிறார். அவர் அனுரவின் ஒத்துழைப்பாளராக இருக்கின்றார்.

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின்போதும் ரணில் விக்கிரமசிங்க தன்னை தோல்வியடைய செய்ய முயற்சி செய்தார். இந்த முறை தேர்தலின் போதும் தன்னை தோல்வியடைய செய்யவே முயற்சி செய்கின்றார்.

ரணில், அனுர என்போர் இருதரப்பினர் அல்ல. இவர்கள் ஒரே அரசியல் கும்பல். இந்தக் கும்பலுக்கான தேவை நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல. 220 இலட்சம் மக்களின் மீதும் வரிச் சுமையை அதிகரிப்பதாகும்.

வரியை குறைப்போம் என்று கூறி சலுகை வழங்குகின்ற ஜனாதிபதி இன்று 10 இலட்சம் பேரின் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார். இலட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இளம் தலைமுறையினரின் தொழில் வாய்ப்பு இல்லாது போயிருக்கிறது. இதற்குப் பிரதான காரணம் பொருளாதாரம் சுருக்கப்பட்டமையாகும். பொருளாதாரத்தை விரிவாக்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைத் திட்டத்தில் உள்ள விடயமாகும்.

வங்குரோத்தடைந்த எமது நாட்டுக்கு கொலை கலாசாரம் வேண்டாம்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் பாரியளவு சேவைகளை ஆற்றி அதனை நிரூபித்திருக்கிறது. அதனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

76 வருட வரலாற்று காலத்துக்குள் நாட்டுக்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சித் தலைவர் நானும் ஐக்கிய மக்கள் சக்தியுமாகும். எனவே இந்த நாட்டுக்கு கொலை கலாசாரமும் அச்சுறுத்தலும் தீவிரவாதமும் தேவையில்லை. ஒழுக்க விழுமியத்துடன் கூடிய ஒரு சமூகமே இந்த நாட்டுக்கு தேவை. அனைவருக்கும் சுபீட்சம் கிடைக்கின்ற நாடொன்று வேண்டும். அந்த நாட்டுக்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.

நாடு வங்கரோத்தடைந்து முழு நாட்டு மக்களும் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய காலத்துக்குள் எமது நாட்டை கட்டியெழுப்புவோம் என உறுதியளிக்கின்றோம்.

220 இலட்சம் மக்களையும் மகிழ்ச்சியடையச்செய்கின்ற வாழ்க்கை முறையொன்றை உருவாக்குவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
Next Post
5 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

5 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.