Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடியில் முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!

களுவாஞ்சிகுடியில் முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா (1924 -2024) நேற்றைய தினம் (14.09.2024) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் அவர்களும், சிறப்பு அதிதியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி கேமலோஜினி குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் ஆலய முன்றலில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த பண்பாட்டு ஊர்வலமானது, பிரதான வீதியூடாக பிரதேச செயலகத்தை அடைந்ததும், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் அவர்களினால் சுவாமி விபுலானந்தரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்தல் மற்றும் பூசை நிகழ்வுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கதாப்பிரசங்கம், பேச்சு, பாடல், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் (அம்பாறை) திரு கே. ஜெயராஜி அவர்களினால் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தினம் தொடர்பான விசேட ஆன்மீக சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
ரவூப் ஹக்கீம் மேடையில் பேசும்போது கல்வீச்சு; மட்டக்களப்பில் சம்பவம்!

ரவூப் ஹக்கீம் மேடையில் பேசும்போது கல்வீச்சு; மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு