சமனலவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிகட்டு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெலிவத்த, பத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.