Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்காத சிங்கள ஆட்சியாளர்கள்; சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு யோகேஸ்வரன் தெரிவிப்பு!

ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்காத சிங்கள ஆட்சியாளர்கள்; சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு யோகேஸ்வரன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நல்லாட்சிக்காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவர் ஆட்சிக்குவந்தால் தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவாகும் என சிந்தித்துப்பாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அமைச்சராகயிருந்தபோது எங்களை அழைத்து எங்களது பிரச்சினைகளை தீர்க்கமுடியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பாரா எனவும் கேள்வியெழுப்பினார்.

நேற்றைய தினம் (17) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்
.
தாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிபேசும் சிங்கள தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திப்பில்லை. அதன் காரணமாக எமது பிரச்சினைகளை நாங்கள் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ரணிலோ, சஜித்தோ தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தது இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட 13வது திருத்ததினை கூட நிறைவேற்றமுடியாத நிலையில் இவர்களினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வினை வழங்கமுடியும்.

தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்கமுடியாவிட்டாலும் தமிழர்களுக்குள்ள பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்கொண்டு செல்லமுடிவதுடன் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்கும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் அவர்களின் கோரிக்கையினையும் தெளிவாக வெளிப்படுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு இன்றுள்ள ஒரே தெரிவு தமிழ் பொதுவேட்பாளர் அதில் மாற்றுக்கருத்துகளை கொண்டிராமல் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றினையவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா; வெளியான அறிக்கை!

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா; வெளியான அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு