இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஒப்பந்தங்களில் இராணுவப் பயிற்சி மற்றும் கேடட் பயிற்சி, பாதுகாப்புக் கல்லூரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு விமான எதிர்ப்பு துப்பாக்கிகளின் பராமரிப்பு தொடர்பான ஒத்துழைப்பும் இந்த ஒப்பந்தங்களில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.








