2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் குமார் குணரத்னம் மற்றும் நான் ஆகிய மூவர் மட்டுமே தேர்தல் களத்தில் எஞ்சியிருப்பதாக உதய கம்மன்பில மற்றும் ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சிலவேளை தன்னை மக்கள் பொது வேட்பாளராகக் கூட களமிறக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பார்ப்போம், 2029ஆம் ஆண்டில் என்ன நடக்கிறது என்பதை” எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் நான் ஜனாதிபதியாகலாம், அல்லது மறுபுறம் அநுர குமார திசாநாயக்க மீண்டும் ஜனாதிபதியாகலாம் அல்லது முன்னிலை சோசலிஸ்ட் கட்சி தரப்பில் இருந்து ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் யார் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை ஒரு கேலிக்கூத்தாக மாற்றாமல், நாட்டை ஆட்சி செய்யக்கூடிய பொருத்தமான தலைவரைத் தெரிவுசெய்வதற்கான முழுமையான அதிகாரமும் உரிமையும் இந்நாட்டின் சாதாரண மக்களிடமே உள்ளது எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.








