Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

38 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

குருக்கள்மடம் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான பகுதியில், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்த பின்னர் கல்முனை ஊடாக காத்தான்குடிக்குப் பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (08.09.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவிக்கையில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரான காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்டோர், குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், குறித்த நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்கு நேற்று மீண்டும் அழைக்கப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மன்றில் முன்னிலையாகியிருந்தார். சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் பிரதேச சபை வழங்கத் தயாராக இருப்பதாக தவிசாளர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 14.09.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வழக்கின் பிரத்தியட்ச முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் இதனைத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு