நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை, மலேரியா நோய்யற்ற நாடு என 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 20 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய 17 பேர் இலங்கை பிரஜைகள் என்பதுடன், அவர்கள் ருவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா, தான்சானியா, சியரா லியோன் மற்றும் எக்குவடோரியல் கினி ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டவர்கள் என தெரிய வருகின்றது.
இதேவேளை, மலேரியா நோயாளர்கள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
071 – 284 1767 மற்றும் 0117 626626 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு 24 நேரமும் அழைப்பை மேற்கொண்டு மலேரியா தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.