திருகோணமலை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில், பல பௌத்த விகாரைகளை நிர்மானிக்கப் போகின்றார் சஜித் பிரேமதாச. இது வெளிப்படையான விடையம் அதேவேளை அவர் கலாச்சார அமைச்சராக இருந்தபோது அனுராதபுரத்தில் பௌத்த விகாரைகளை கட்டிட ஆய்வுக்காக படம் எடுத்த பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர்கள் பௌத்த விடையங்களை மதிக்க தெரியாதவர்கள் என கைது செய்தவர் என நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்
மட்டக்களப்பு வெய்ஸ்ஒவ மீடியா கற்கை நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
ஜே.வி.பியினர் கிளர்ச்சிக்குரியவர்கள் கடந்த காலத்தில் கிளர்ச்சிகள் ஊடாக நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்றவர்கள். ஆக்க பூர்வமாக எதனையும் சாதித்தவர்கள் அல்ல அரகலய போராட்டம் முடிந்தும் பாராளுமன்றத்தை தீ வைத்து அழிக்க முற்பட்டவரர்கள் என்பதுடன் நாட்டில் எத்தனையே அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் எழுச்சிக்கு உரியவர்கள் அல்ல.
அதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் கட்டிட ஆய்வுக்காக பௌத்த விகாரைகள், ஆலையங்களுக்கு சென்று அங்கு அதனை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டபோது அப்போது கலாச்சார அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸ இந்த முஸ்லீம் மாணவர்கள் பௌத்த விடையங்களை மதிக்க தெரியாதவர்கள் உடன் கைது செய்யுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டு கைது செய்தவர்.
ஆனால் அதே இடத்தில் பாக்கியா சந்தோஸ் எனும் இசையமைப்பாளர் அங்கு குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் செய்தனர். அப்போது அதனை இவரும் சோர்ந்து இரசிக்கின்றார். ஆனால் இந்த பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்ததுடன் மிகவும் மோசமாக பேசியவர். எனவே அவருடன் நட்பில் இருந்தவன் நான். பல விடையங்களை தெரித்தபோதும் அவர் ஒரு போதும் கேட்பர் அல்ல என்பதுடன், ஒரு விதண்டாவாதம் பேசுகின்றவர் தான் அவர்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய உடனேயே ரணில் ராஜபக்ச என்ற கோசத்தை எழுப்பியவர்கள் எதிர் கட்சியினர். அவர்கள் நாடு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, நாட்டை பாரம் எடுத்து மக்களுக்கு உதவாத இவர்கள் ரணில் ராஜபக்ச என்ற கோசத்தை உருவாக்கினார்கள். ஆனால் இப்போது பார்த்தால் ராஜபக்ச தனியாகவும், ரணில் தனியாகவும் ஆனால் ராஜபக்சவின் கட்சி எம்.பிக்கள் ரணில் பக்கம் வந்திருக்கின்றனர். ஆகவே ரணில் ராஜபக்ஸ அல்ல ரணில் அவர் கட்சியை விட்டுவிட்டு ஒரு சுயேட்சை வேட்பாளர் என காட்டியிருக்கின்றார்.
ரணில் பாராளுமன்றத்தில் சொல்லக் கூடிய ஊழல் மோசடி தொடர்பான சட்டங்களை இயற்றி, மக்கள் மத்தியில் ஆணை கேட்கின்றார். இந்த ஊழல் காரர்களை எல்லாம் சட்டரீதியாக தண்டிக்க தாயாருங்கள், இந்த ஊழல்வாதிகளை எல்லாம் சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு, பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கின்ற சட்டங்களை அமுல்படுத்த ஆணைதாருங்கள் என மக்களிடம் ஆணையை கேட்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் இன்று சாதனைகள் பல செய்துள்ளார்.
எனவே மக்கள் இன்று ஒரு நல்ல சந்தர்ப்பமாக பாவித்து ராஜபக்சவாக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம் யாரெல்லாம் ஊழல்வாதிகளோ, யாரெல்லாம் கள்ளர்கள் என சொல்லுகின்றார்களோ, அவற்றை எல்லாம் அகற்றுவதற்கு ரணில் ஆணை கேட்கின்றார் இதற்கு ஆதரவு அளியுங்கள் என கேட்கின்றேன்.
அது மாத்திரம் அல்ல இவர்கள் எத்தனையே பயில்களை வைத்துக் கொண்டு திரிந்தார்கள். இவர்கள் எத்தனை வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அண்மையில் சுகாதரா அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊழல் விடையமாக வந்தபோது ஜனாதிபதி ரணில் எந்த வகையிலும் ஈடுபடவில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்போதும் இருக்கின்ற அந்த சுயாதீனமான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அடிப்படையில் ஜனாதிபதியா இருந்தவர் ஒரு நாளும் ஜனாதிபதி பதவியை துஸ்பிரயோகம் செய்யாதவர் என்று சொல்வதில் மகிழ்சியடைகின்றேன்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் அபிலாசைகளுக்கு நிறை கொள்கை திட்டத்தை தந்திருக்கின்றார். அதில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மத்தியஸ்தானமாக வைத்து பல பொருளாதார அபிவிருத்திகளை செய்வதற்காக இளைஞர்களுக்கு ஒரு டிஜிட்டல் கிளப் ஒன்றை மாவட்டத்தில் ஏற்பாடு செய்து, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய விடையங்களை இங்கு மையமாக வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே அவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள ஒவ்வொரு வாக்குகளும். ரணிலுக்கு வழங்குவது அத்தியாவசியமானது. எனவே தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.