Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுர ஆட்சிக்கு வந்தால் அனைவரும் ஓட வேண்டும் என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

அனுர ஆட்சிக்கு வந்தால் அனைவரும் ஓட வேண்டும் என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புத்தளத்தில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

“முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக நாடாளுமன்றத்தில் கூறியவர்தான் அநுரகுமார திசாநாயக்க.

ஈஸ்டர் தாக்குதல் காலங்களிலும், கொவிட் தொற்று நேரங்களிலும் அநுரவின் சுயரூபத்தைக் காணமுடிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எடுத்த நிலைப்பாட்டை நாம் மறக்க முடியாது.

ஜனாஸாக்களை எரிப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல உதவியவர்கள் இவர்கள். பயங்கரவாதத்துடன் எமது இஸ்லாத்தை இணைத்துப் பேசியவர்களும் இவர்கள் தான்.

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர், இன்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

வருடக்கணக்காக குற்ற ஆதாரங்களை வைத்துக்கொண்டு அலையும் இவர்களால், ஒரு கள்வனைகூட பிடிக்க முடியவில்லை.

இவர்களால் வீசா மோசடியைத் தடுக்க முடியவில்லை.

கெஹெலியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி பேசவே இல்லை. இந்த நிலையில் தான் மாற்றம் வேண்டும் எனப் பிரசாரம் செய்கின்றனர்.

அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடங்களில் ஓடினார். அந்தக் காய்ச்சல் நீங்குவதற்குள் அநுரவின் காய்ச்சல் சிலரைப் பீடித்துள்ளது.

அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும். சொந்தங்களை, உறவுகளைக்கூடக் கவனிக்காத, தொப்பி அணிந்த சிலரே, அநுரவுக்குப் பின்னால் வீர வசனம் பேசுகின்றனர்.

ரணிலுக்கு அளிக்கும் வாக்குகளை கடலில் கொட்டிவிடலாம். களப்போட்டியில் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
Next Post
அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு