Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள்; 32 பேர் உயிரிழப்பு!

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள்; 32 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று (18) ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்து 12 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த வாக்கி டாக்கிகள் எல்லாமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் பேஜர் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தவரின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகளில் ஒன்று அங்கும் வெடித்து சிதறியுள்ளது.

பேஜர், வாக்கி-டாக்கி என அடுத்தடுத்து இது போன்ற தாக்குதல்கள் நடந்ததற்கு இஸ்ரேல் தான் காரணம் என லெபனான் அரசு கூறி வருகிறது. மேலும், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறிவருகிறது. இதற்கு இஸ்ரேல் எந்த பதிலும் கூறாமல் மௌனம் சாதித்து வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இது போன்ற பழைய தொழில்நுட்ப உபகரணங்களான பேஜர்கள், வாக்கி டாக்கிகளை போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரம் நேற்று வெடித்துச் சிதறிய இந்த வாக்கி டாக்கிகள் அனைத்துமே 5 மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இது அனைத்தும் தைவான் நாட்டின் தயாரிப்பு என்று ஒரு புறம் கூறப்பட்டாலும் தைவான் அரசு இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருந்தாலும் இந்தத் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக பிரபல ஊடகங்களால் கூறப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

November 18, 2026
இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்
செய்திகள்

இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்

November 18, 2026
அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

November 18, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு; ஹெரோயினுடன் இளைஞர் கைது!
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு; ஹெரோயினுடன் இளைஞர் கைது!

November 18, 2026
ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டமைக்கு சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!
செய்திகள்

ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டமைக்கு சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!

November 17, 2026
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைகின்றன!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைகின்றன!

November 17, 2026
Next Post
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு