Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் தற்காலிக நிறுத்தம்!

புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் தற்காலிக நிறுத்தம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

விசாரணை முடிவடைந்து இறுதி தீர்மானம் வரும் வரை விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை, அதுவரை பரீட்சை முடிவுகள் வெளியிடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது அவற்றை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

குறித்த பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல் வௌியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளது உறுதியானால் மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், விதிகளை பின்பற்றாமல், பரீட்சைக்கு முந்தைய நாட்களில், யூக வினாத்தாள்கள் குறித்து ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

வினாத்தாள் கசிந்திருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

September 14, 2026
Next Post
வீட்டுக்குள் புகுந்து வாக்காளர் அட்டைகளை திருடிய கும்பல்!

வீட்டுக்குள் புகுந்து வாக்காளர் அட்டைகளை திருடிய கும்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு