பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் சேவைகள் என்பன இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க நேற்று (20) வெளியிட்டார்.