Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தண்ணீர் பற்றாக்குறையில் சீவிக்கும் பொதுமக்கள்!

மட்டக்களப்பில் தண்ணீர் பற்றாக்குறையில் சீவிக்கும் பொதுமக்கள்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது அந்த கிராமம் கல்லரிப்பு. கல்லரிப்புஎன்பது அக் கிராமத்தின் பெயர். அந்த கிராமத்தில் ஆக 41 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் கடந்த காலங்களிலே தமது குடிதண்ணீர் மற்றும் தேவைகளுக்காக ஆற்றிலும் ஓடையிலும் தங்கியிருந்தார்கள்.

குடிதண்ணீர் பிரச்னை பற்றி அவர்கள் கூறியதாவது சுத்தமான நீர் எடுக்க வேண்டுமாக இருந்தால் சுமார் 2கிலோ மீற்றர் தூரம் நடந்து அதனைப் பெறவேண்டிய தேவையுள்ளது.நாளடைவில் பிரதேச சபை
யூடாக குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்துள்ளது . அதுவும் சில நேரங்களில் தாமதமாகித்தான் கிடைக்கும்.

அவ் வேளைகளில் ஆற்றில் இருந்து நீரை பெறுவோம். எமது ஊரில் பாடசாலை இல்லை.மாணவர்கள் சீருடைகளை இங்கு கழுவினால் பழுப்பு நிறத்தில் காணப்படும். அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லும் எமது
மாணவர்களுக்கு அது சிரமம். ஆசிரியர்கள் சிலவேளைகளில் இந்த நிறம் பற்றி கேள்விகள் கேட்பதுண்டு.

இந் நிலையில் இங்கு குடி தண்ணீர் திட்டம் ஒன்றை மேற் கொள்ள வெளிநாட்டு உதவியோடு அரச சார்பற்ற நிறுவன மொன்று முன்வந்தது.இந்த குடிதண்ணீர் திட்டம் 31-3-2023 இல் ஆரம்பிக்கப்பட்டது.
ஆற்றில் இருந்து நீரை பெற்று சுத்திகரிப்புச் செய்து அதனை வழங்குவதற்காக மின்சாரச் செலவுக்காக மாதம் 100 ரூபாய் வழங்குமாறு மக்களிடம் கோரப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியில் அந்த நூறு ரூபாய் வழங்கினார்கள்.ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே ஒரு மாதம் வரைதான் நீடித்தது.ஒருமாதமே குடிதண்ணீர்
கிடைத்தது. அதுவும் எதிர்பார்த்த சுத்தமான நீர் இல்லை.அதனைக்கூட ஏப்ரல் மாதம் மாத்திரமே அதனை வழங்கியிருந்தார்கள். அதன் பின்பு குடி தண்ணீர் வழங்கப்படவில்லை.

தற்போது இக் குடிதண்ணீர்த் திட்டமும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது நாங்கள் குடி தண்ணீருக்காக வெகு தூரம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.இந் நிலையில் மக்கள் வெகுண்டெழுந்து அந்த குடி
தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவிய ஒப்பந்தக்காரரிடம் கேட்ட பொழுது அதற்குரிய இரசாயன திரவம் ஒன்று வரும். அது வருகின்ற பொழுது குடிதண்ணீர் தருவோம் என்று கையை விரித்துவிட்டார்.
அதனால் குடிதண்ணீருக்காக அல்லாடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது-என்றார்.

தற்பொழுது அந்த மக்கள் குடிதண்ணீருக்காக மீண்டும் மீண்டும் தொலைதூரம் பயணிக்கவேண்டி இருக்கின்றது .இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனிக்கவேண்டும் என்று அந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

தொடர்புடையசெய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!
செய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!

August 14, 2026
வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை
செய்திகள்

வாழைச்சேனை வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

August 14, 2026
மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம் முன்னெடுப்பு

August 14, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
Next Post
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் அதிகரிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.