Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனப்பிரச்சனை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நிலைப்பாடு!

இனப்பிரச்சனை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நிலைப்பாடு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுத் தேர்தலை தொடர்ந்து நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று பிரதமர் ஹரிணி
அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அரசியல் வாக்குறுதியல்ல. அது அவர்களின் உரிமை.

எவ்வித மாற்றமுமில்லாமல் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம்.

இனப்பிரச்சனைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள். அதுவல்ல.

அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

சட்ட மாற்றத்தின் ஊடாக மாத்திரம் இதனை மேற்கொள்ள முடியாது. நாட்டை நிர்வகிக்கும் கலாசாரம் மாற்றமடைய வேண்டும். அந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவோம்.

மொழி உரிமை, அரச நிர்வாக உரிமை பொதுவான முறையில் உறுதிப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பின் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அரசியல், கல்வி, சுகாதாரம், சமூகம் சார்ந்த விடயங்கள் உட்பட அடிப்படைத் தேவைகளில் காணப்படும் பிரச்சினைகள் இனப்பிரச்சினைக்கு ஒரு காரணியாக உள்ளது.

யுத்தம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கவிலலை. இடைக்கால அரசாங்கத்தில் பாரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அரசாங்கத்தின் செயற்பாட்டு ஒழுங்கு முறையின் ஊடாக காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளு்ககு முரண்பாடற்ற வகையில் தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய  சாணக்கியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய சாணக்கியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
Next Post
சுகபோகங்களை இழந்துவிடாமல் இருக்க ஓடித்திரியும் கட்சிகள்!

சுகபோகங்களை இழந்துவிடாமல் இருக்க ஓடித்திரியும் கட்சிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.