Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

2 years ago
in செய்திகள்

நடந்து முடிந்துள்ள 2024ஆம் கல்வியாண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் உள்ளடக்கப்பட்ட வினாக்களில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்த விவகாரம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு இடர் ஏற்படுத்தாத வகையில் குறித்த மூன்று வினாக்களுக்குமான புள்ளிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

எனினும், குறித்த விவகாரம் தொடர்பில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மூன்று வினாக்களுக்கும் முழுமையான புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நேற்றையதினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
ஜூலி சங்-அநுர விசேட சந்திப்பு!

ஜூலி சங்-அநுர விசேட சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு