Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதலிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றிய களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோகத்தர்; 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய காதலிக்கு விளக்கமறியல்!

காதலிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றிய களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோகத்தர்; 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய காதலிக்கு விளக்கமறியல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஒட்டிசுட்டானில் இருந்து தேடிவந்த காதலி ஒருவருக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோத்தரின் வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ஒட்டிசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்ட 33 வயதுடைய பெண் ஒருவரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (1) உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆரையம்பதியைச் சேர்ந்த திருமணமாகி, குழந்தையுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் அங்கு 33 வயதுடைய பெண் ஒருவரை தான் திருமணம் முடிக்கவில்லை என தெரிவித்து காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் காதலனை தேடி குறித்த காதலி கடந்த யூன் மாதம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் வைத்து காதலனை சந்தித்த போது அவர் ஏற்கனவே திருமணம் முடித்து குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் தான் திருமணம் முடிக்கவில்லை என தெரிவித்து குறித்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டார் என அங்கு அவருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

இனையடுத்து அங்கு கடமையாற்றிவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த பெண்ணின் பிரச்சனையை கேட்டறிந்த நிலையில் பெண்ணின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக தங்குவதற்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆலயம் மற்றும் வெளியில் செல்லும் போது அவரையும் கூட்டிக் கொண்டு, வீட்டை பூட்டி அதன் திறப்பை வெளியில் வழமையாக வைக்கும் இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு சென்று வந்துள்ளார்.

இவ்வாறு 3 தினங்கள் கடந்த நிலையில் யூன் 10 ம் திகதி குறித்த பெண் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறி குறித்த வீட்டிற்கு அருகாமையில் ஒளிந்திருத்துள்ளார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டை பூட்டிவிட்டு கதவின் திறப்பை வழமைபோல வைக்கும் இடத்தில் ஒளித்துவைத்துவிட்டு கடமைக்கு செல்லும்வரை காத்திருந்துவிட்டு, அங்கு சென்று அவர் ஒளித்து வைத்திருந்த கதவின் திறப்பை எடுத்து வீட்டிற்குள் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.

கடமை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டின் கதவை திறந்தபோது தனது தங்க ஆபரணங்கள் திருடுப்போயுள்ளதை கண்டுகொண்ட அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிசாரின் விசாரணைகளின் அதனடிப்படையில் திருடிய பெண் 3 மாதங்களாக தலைமறைவாகி வாழ்ந்து வந்த நிலையில், திங்கட்கிழமை (30) ஒட்டிசுட்டானில் வைத்து காத்தான்குடி பொலிசார் அவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
ஒரு மணிநேரத்தில் கடவுச்சீட்டு பெற்ற அரச அதிகாரியினால் சர்ச்சை!

ஒரு மணிநேரத்தில் கடவுச்சீட்டு பெற்ற அரச அதிகாரியினால் சர்ச்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.