Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!

கல்முனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து விசேட தேர்ச்சி பெற்ற அணியினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான சட்டவிரோத வெளிநாட்டு சிகரட் கார்ட்டுன்கள் மீட்கப்பட்டதுடன், இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய 20,200 சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகள் கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்கின்ற கடை ஒன்றிற்கு கடத்த முற்பட்ட வேளை விசேட அதிரடிப்படையினரால் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டியில் பயணம் செய்த கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி ஆட்டோ பசார் சந்தி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சந்தேக நபர் உட்பட மருதமுனை ஹாஜியார் வீதி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய சந்தேக நபரையும் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான சம்பத் குமார அசித ரணசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்கின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 45 பேர் பலி!

செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 45 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு