அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல மற்றும் அளுத்கம ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் (02) இரவு ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த ரயில் மோதியே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலமானது பிரேத பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.