Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது புதையுண்டு கிடந்த குண்டு வெடித்துள்ளது!

ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது புதையுண்டு கிடந்த குண்டு வெடித்துள்ளது!

2 years ago
in உலக செய்திகள், தொழில்நுட்பம்

ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு ஒன்று நேற்று (02) புதன்கிழமை வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின் தற்காப்புப் படையைச் சேர்ந்த குண்டு செயலிழப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது தற்கொலைப் பயணங்களில் “காமிகேஸ்” விமானங்களைத் தடுப்பதற்காக வீசப்பட்டதாகக் கருதப்படுகிறது.

குறித்த பகுதியில் மீண்டும் வெடிப்பு சம்பவம் நிகழ வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுவதுடன், பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தற்போது சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

விமான நிலையத்தை இன்னும் ஓரிரு தினங்களில் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943ல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டில் மொத்தம் 41 டன் எடையுள்ள 2,348 குண்டுகள் அகற்றப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு
உலக செய்திகள்

பீஜி நாட்டில் 60 பேரில் ஒருவருக்கு எயிட்ஸ் தோற்று; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு

September 18, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
Next Post
வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது; உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது; உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு