இணையம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் நாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.