மதுவரி திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக யு.டி.என் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய எம்.ஜே.குணசிறியின் பதவி காலம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, பதில் மதுவரி ஆணையாளர் நாயகமாக யு.டி.என் ஜயவீரவை நியமிக்க நிதியமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.