Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வன்னியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 423 வேட்பாளர்கள் களத்தில்!

வன்னியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 423 வேட்பாளர்கள் களத்தில்!

2 years ago
in அரசியல், செய்திகள்

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்தவகையில், இம்முறை வன்னிதேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக்குழுக்கள்என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தது.

அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரியமுறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக எங்கள்மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசியகூட்டணி ஆகியகட்சிகளின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

June 16, 2026
சுரேஷ் சலே தொடர்பான முறைப்பாடு; CID அதிகாரிகளிடம் இன்று மீண்டும் வாக்குமூலம்
செய்திகள்

சுரேஷ் சலே தொடர்பான முறைப்பாடு; CID அதிகாரிகளிடம் இன்று மீண்டும் வாக்குமூலம்

June 16, 2026
Next Post
மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு