Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹாரிஸ் ஏன் நீக்கப்பட்டார்!

ஹாரிஸ் ஏன் நீக்கப்பட்டார்!

2 years ago
in அரசியல், செய்திகள்

சஜித்தை ஆதரித்து ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்யாமையினால் ஹாரிஸ்க்கு போட்டியிட வாய்புக் கொடுக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹாரிஸின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பிரசாரப் பணிகளில் ஈடுபடாமை காரணமாகவே அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நிசாம் காரியப்பர்,

ஹாரிஸின் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று மேற்கொண்டு அவரிடம் விளக்கம் கோரியபோது, தான் சுகயீனமடைந்ததால் பிரசாரப் பணிகளில் ஈடுபட முடியாது போனதாக அறிவித்திருத்தார். ஆனால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக அமையவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் காணப்பட்டார்.

இருப்பினும் பின்னர் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக தான் செயற்படுவதாக எமது தலைமைக்கு அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் இவரின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்ப்பும், அதிருப்தியும் வலுவாக எழுந்தன. கட்சியின் முக்கியஸ்தர்களில் எவரேனும் இவ்வாறு நடந்து கொண்டாலும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதில்லை. மன்னித்து விடும் என்ற தவறான கருத்துக்களும் மேலோங்கி நின்றன.

மேலும், தற்போது கையளிக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்களில் நால்வர், முன்னாள் எம்.பி ஹாரிஸை வேட்புமனுவுக்குள் உள்வாங்கினால் தாங்கள் ஒப்பமிடுவதிலிருந்து தவிர்ந்து வெளியேறுவோம் என கட்சித் தலைமைக்கு அழுத்தமாகத் தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் கட்சியின் தலவைர் ரவூப் ஹக்கீம் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடாததால் ஹாரிஸை வேட்புப் பட்டியலில் உள்ளீர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது என்றும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மட்டு பாசிக்குடா கடலில் மதுபோதையில் நீராட சென்றவர்களை தடுக்கமுயற்சித்த பொலிசார் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

மட்டு பாசிக்குடா கடலில் மதுபோதையில் நீராட சென்றவர்களை தடுக்கமுயற்சித்த பொலிசார் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு