Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பாசிக்குடா கடலில் மதுபோதையில் நீராட சென்றவர்களை தடுக்கமுயற்சித்த பொலிசார் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

மட்டு பாசிக்குடா கடலில் மதுபோதையில் நீராட சென்றவர்களை தடுக்கமுயற்சித்த பொலிசார் மீது தாக்குதல்; ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரையில் மதுபோதையில் கடலில் நீராடச் சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய பொலிசார் மீது தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (12) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை செவனபிட்டியாவைச் சேர்ந்த குழுவினர் சம்பவதினமான நேற்றுமுன்தினம் உல்லாச பயணம் மேற்கொண்டு பாசிக்குடா கடற்கரையில் பொழுதை போக்கி கொண்டதுடன் அங்கு மதுபானம் அருந்தி கொண்ட பின்னர் கடலில் நீராட முயற்சித்தபோது அங்கு காவல் கடமையில் இருந்த பொலிசார் மதுபோதையில் நீராடகூடாது கடல் ஆபத்தானது உயிருக்கு ஏதாவது நடக்கும் எனவே மது போதை இல்லாத நிலையில் தாராளமாக நீராடமுடியும் என தெரிவித்து அவர்களை தடுத்தனர்.

இதன்போது மதுபோதையில் இருந்தவர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் மீது மதுபோதையில் இருந்தவர்கள் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இரு பொலிசார் காயமடைந்ததையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் தாக்குதலை மேற்கொண்ட ஆண் ஒருவரை கைது செய்தனர்.

பொலிசாரின் கடமைக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
சமூக விரோத செயலில் ஈடுபடும் வேட்பாளர்களை நிராகரிப்போம்!

சமூக விரோத செயலில் ஈடுபடும் வேட்பாளர்களை நிராகரிப்போம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு