Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கவேண்டும், நிவாரணம் கிடைக்கவேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் இன்று(14) மதத்தலைவர்களை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பில் உள்ள முன்னாள் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினை சந்தித்த வைத்தியர் இ.சிறிநாத் அவரிடம் ஆசிபெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள இராமகிருஸ்ண மிசனுக்கு சென்ற வேட்பாளர் சுவாமி நீலதமானந்தா மகராஜ் அவர்களிடமும் ஆசிபெற்றார்.

இதன்போது தான் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் தமது நோக்கம் தொடர்பில் மதத்தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் சிறிநாத்,

எமது பயணத்தில் வன்முறைகள் அற்ற, ஊழல் அற்ற தமிழ் தேசியத்தினை பாதுகாத்து நிற்கின்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக நான் களமிறங்கியுள்ளேன்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. புதிய அரசாங்கம் கூட உறுதிமொழிகளை வழங்கியுள்ளபோதிலும் இதுவரை நிறைவேற்றவில்லை. இது தொடர்பில் ஆயருடன் கலந்துரையாடியிருந்தேன்.

எமது பயணத்தில் வன்முறைகள், ஊழல்களுக்கு முற்றாக எதிராகயிருக்கும்.

அதேசமயம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்,நிவாரணம் கிடைக்கவேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நீதிகோரிய போராட்டங்களை தொடர்ச்சியாக தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் அதற்கு பக்கபலமாக தமிழ் மக்கள் இருக்கவேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
Next Post
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி விபத்து!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகனமொன்றினை முந்தி செல்ல முற்பட்ட லொறி விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு