Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினரின் வேட்பாளர் அறிமுகம்!

மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினரின் வேட்பாளர் அறிமுகம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகின்றது. அதற்காக மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினர் சுயேச்சை குழு 11 இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். எனவே தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் மக்களுக்கான சமூக சேவையை தொடர்ந்து எமது அமைப்பு சேவை செய்துவரும் என சுயேச்சைக்குழு 11 தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிடும் தலைவர் பொன்னுத்துரை சுதர்சன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியாவில் நேற்று புதன்கிழமை(16) இடம்பெற்ற சுயேச்சைக் குழு 11 வேட்பாளர் அறிமுகமும் ஊடக மாநாடும் இடம்பெற்றது இதன் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

பொன்னுத்துரை சுதர்சன் தலைமையில் சிங்கராசா மதவாணன், செல்வராசா அமுதினி, சாமித்தம்பி வேலாயுதம், சிவலிங்கம் லோகேஸ்வரன், அமரசிங்கம் வினாயகமூர்த்தி, குணராசா ஜெகதீஸ்வரன், நித்தியானந்தன் நிமல்ராஜ் ஆகிய 8 பேர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர் இவர்களில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கல்விமான்கள் இளைஞர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் கொடி அமைப்பு ஊடாக சமூக சேவை செய்து கொண்டிருந்த சகோதரி ஒருவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாக சிறையில் இருந்தார். ஆகவே சமூக சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்ததன் காரணமாக அதற்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி மக்களுக்கு சேவை செய்வதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகின்றது

இலங்கையை பொறுத்த வரையிலே வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சமூக சேவையினை திறன்பட கல்வி வளர்ச்சி சமூக வளர்ச்சி வேலை வாய்ப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சகல வகையிலும் எமது சமூக மக்களை முன்னேற்றுவதற்காக இலங்கையிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்பாட்டாளர்கள் உதவி செயற்பாட்டாளர்கள் ஊழியர்கள் போன்ற ஒரு கட்டமைப்பினை அடிப்படையாக வைத்து திறம்பட சேவை செய்துவருகின்றோம்.

இதன் காரணமாக சமூக அமைப்பாக மக்கள் மனதில் குடிகொண்ட அமைப்பு தற்பொழுது அரசியல் களத்திலே களமிறங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சிறந்த ஊழல் அற்ற சமூகசேவையை செய்வதற்காக அரசியிலில் இறங்கியுள்ளோம். எனவே மக்கள் உங்கள் ஆதரவை வழங்குங்கள் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
Next Post
13 நாட்களில் 41900 கோடி ரூபா கடனை பெற்ற புதிய அரசாங்கம்; ரோஹினி கவிரத்ன குற்றச்சாட்டு

13 நாட்களில் 41900 கோடி ரூபா கடனை பெற்ற புதிய அரசாங்கம்; ரோஹினி கவிரத்ன குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு