Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 17 வயது பள்ளி மாணவன் கைது

7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 17 வயது பள்ளி மாணவன் கைது

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

விமானங்களுக்கு சமூக ஊடகம் வாயிலாக போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவரை மும்பை காவல்துறை கைது செய்தது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து கடந்த திங்கள்கிழமை (14) புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. பின்னா், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது கண்டறியப்பட்டது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமையன்று (15) , தில்லியிலிருந்து சிகாகோ புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், தமிழகத்தின் மதுரையிலிருந்து சிங்கப்பூா் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்பட 7 உள்நாட்டு, சா்வதேச விமானங்களுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அவை போலி மிரட்டல்கள் என்று உறுதியானது.

இச்சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானப் பயணிகள், பணியாளா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து மும்பை காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். விசாரணயில் திங்கள்கிழமை மிரட்டல் விடுத்தது சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவா் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து சத்தீஸ்கா் விரைந்த போலிஸாா், அவரை கைது செய்து மும்பை அழைத்து வந்தனா்.

சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்த சிறுவனுக்கு 4 நாள்கள் காவல் வழங்கப்பட்டது. மாணவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின்படி வீட்டின் அருகேயுள்ள கடைக்காரருக்கும் மாணவருக்கும் இடையே நிதி விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடைக்காரரின் பெயரில் ‘எக்ஸ்’ தளத்தில் போலி கணக்கை தொடங்கிய மாணவா், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவரின் தந்தை மற்றும் மேலும் ஒரு நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் இந்த மாணவருக்கும் தொடா்பில்லை என்பதால் அதற்கு பின்னணியிலுள்ள நபா்களைக் கண்டறிய போலிஸாா் விசாரணையைத் தொடா்கின்றனா். கடந்த மூன்று நாள்களில் 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆகாசா விமானம், 4 இண்டிகோ விமானங்கள், 2 ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விமானப் படை விமானத்தில் பயணித்த இந்திய பயணிகள், தில்லியில் இருந்து 191 பயணிகள், 20 விமானப் பணியாளா்களுடன் அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்துக்கு சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் கனடாவின் இகாலுயிட் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், பயணிகள் அனைவரையும் இகாலுயிட்டில் இருந்து சிகாகோவுக்கு கனடா விமானப் படை விமானம் அழைத்துச் சென்றதாக ஏா் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
Next Post
மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினரின் வேட்பாளர் அறிமுகம்!

மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினரின் வேட்பாளர் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.