கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி, போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமை (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
1990களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறை வழியில் பிரிந்தபோது, இன ரீதியாக அல்பேனியரான தாச்சி, ‘கொசோவோ விடுதலைப் படையின்’ (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்தார். அப்போது கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மோதலின்போது, கொசோவோ விடுதலைப் படைப் பிரிவினரால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் செர்பியப் பாதுகாப்புப் படைகளுக்குத் துணை நின்றதாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பாயம் கூறியது.







