Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்திரயான் 3 விண்கலம் அடுத்தவாரம் விண்ணில் பாய்கிறது!

சந்திரயான் 3 விண்கலம் அடுத்தவாரம் விண்ணில் பாய்கிறது!

3 years ago
in தொழில்நுட்பம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக சந்திராயன் 3-யை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சந்திராயன் 3 விண்கலம் ராக்கெட் LVM MK மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. சந்திராயன் மூன்று விண்கலத்தின் அனைத்து பாகங்களும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சந்திரயான் திட்டம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

சந்திரயான் – 2

ஜூலை மாதம் 2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் – 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 இருக்கும் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக ஏற்கனவே இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.

சந்திரயான் 3

சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. propulsion, லேண்டர் மற்றும் ரோவர். அதாவது புரபுல்சன் பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ தொலைவுக்கு கொண்டு செல்லும். லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் பகுதியாகும், ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ- அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 ஏவுகணையின் பொருத்தப்பட உள்ள சி.இ.20 க்ரையோஜெனிக் எஞ்சினின் சோதனை அதாவது இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சந்திராயன் 3 விண்கலம் நேற்றைய தினம் ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நிலவு ஆராய்ச்சி: நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக சந்திராயன் 3- விண்கலத்தை திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!
செய்திகள்

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

August 27, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்
செய்திகள்

இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்

August 19, 2026
சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!
செய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

July 1, 2026
Next Post
இலங்கை – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை!

இலங்கை - நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.