Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கி வருகிறார்.

இந்தத் திட்டத்திற்கு இலங்கையை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் மற்றும் மெக்கட்ரோனிக்ஸ் நிபுணர் சரத் கொடகொட தலைமை தாங்குகிறார்.

இந்த ரோபோ ஒரு சாதாரண நாயைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்தி, சுற்றியுள்ள சூழலைக் கண்டறிந்து, பேசிக்கொண்டே மக்களுக்கு வழிகாட்டுகிறது.

இந்த அமைப்பு, நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்கும் திறன்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, சுற்றியுள்ள சூழலைக் கண்டறிந்து பயனரின் தேவைகளுக்கு ஏற்ப வழித்தடங்களை திட்டமிட, LiDAR போன்ற மேம்பட்ட சென்சார்களைப் பயன்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு பயனர் தேனீர் கடைக்குச் செல்ல விரும்புகிறேன் என கூறும்போது, ​​அந்த ரோபோ அருகிலுள்ள இடங்களைக் கண்டறிந்து மாற்று வழிகளைப் பரிந்துரைக்கிறது.

அந்த ரோபோ தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு ஒரு பாதுகாப்பான வழியைத் திட்டமிட்டு பயனருக்கு வழிகாட்டுகிறது.

தேவைப்பட்டால், உள்ளே இருக்கும் சூழலையும் விவரிக்கிறது. இந்த ரோபோ, Unitree Go2 ரோபோ நாய் தளத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது செயற்கை நுண்ணறிவு, சென்சார்கள் மற்றும் தொட்டுணரக்கூடிய பின்னூட்ட அமைப்பை பயன்படுத்துகிறது.

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளிப்பது, பயணத்தை எளிதாக்குவது மற்றும் சமூகப் பங்கேற்பை அதிகரிப்பது ஆகியவையே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

எனினும், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு புதிய தலைமுறை பேசும் ரோபோ வழிகாட்டி நாய் ஆகும்.

இது எதிர்காலத்தில் பார்வைக் குறைபாடு உள்ள சமூகத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!
செய்திகள்

நிதிச் சட்ட மீறல்; 11 நிறுவனங்களுக்கு ரூ.14.6 மில்லியன் அபராதம்!

July 21, 2026
Next Post
அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு