Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

2 months ago
in செய்திகள், தொழில்நுட்பம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தமது முறைப்பாடுகள் மற்றும் பணித்தள சிக்கல்களை விரைவாகவும் எளிதாகவும் சமர்ப்பிப்பதற்காக ‘லங்காகொநெக்ட்’ (LankaConnect) எனும் புதிய கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டு முகாமைத்துவ செயலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில், கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச வீட்டுப் பணியாளர் தினத்தை முன்னிட்டு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த செயலி மூலம் நேரடியாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சமர்ப்பிக்க முடியும்.

அதேபோன்று, கல்வி அல்லது வதிவிட நோக்கத்திற்காக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கன்சியூலர் பிரிவுக்கும் இந்த செயலி ஊடாக நேரடியாக முறைப்பாடுகளை அனுப்பலாம்.

முறைப்பாடுகளை எழுத்து வடிவத்துடன் மட்டுமன்றி, குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் மூலமும் சமர்ப்பிக்க வசதி வழங்கப்பட்டுள்ளது.

உலகின் எந்த நாட்டிலிருந்தும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்பதுடன், சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளின் தற்போதைய நிலையை நேரடியாக கண்காணிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிதி உதவியுடன் இலங்கை மொபிடெல் நிறுவனத்தினால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை Google Play Store மற்றும் Apple App Store ஊடாக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு