Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கில் புதிய ரயிலுக்கு எதிர்ப்பு; ஆபத்தான நிலையில் காணப்படுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கில் புதிய ரயிலுக்கு எதிர்ப்பு; ஆபத்தான நிலையில் காணப்படுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றச்சாட்டு

2 years ago
in செய்திகள்

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

3,000 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தை, குறைபாடுகளுடன் ரயில்வே துறை கையகப்படுத்தியதே இதற்கு காரணம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நேற்று(20) தெரிவித்தார்.

இந்த பாதை நவீனமயப்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக இருந்த சமிக்ஞை அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நான்கு புகையிரத கடவைகளில் கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தலாவ, தம்புத்தேகம, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள கடவைகள் கையால் இயக்கப்படும் வாயில்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் இதுவரை பாதுகாப்பு கதவுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உரிய தரம் இன்றி மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் பணிகளால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத சாரதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களை தாம் பொறுப்பேற்கப்போவதில்லை எனவும், அதற்கமைய பயணச்சீட்டு வழங்கப்படவோ, பொதிகள் மற்றும் பொருட்கள் பெறப்படவோ அல்லது புகையிரத திணைக்களத்திற்கு வருமானம் அறவிடப்படவோ மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு